தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் வேனுக்கு தீ வைத்த விவகாரத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெகவீரபுரத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரின் உறவினரான தாஸ், அதிமுக வேட்பாளரின் பிரச்சாரங்களுக்கு வேன் அனுப்பி வந்துள்ளார். இதனிடையே அதிமுக-திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கொண்ட கும்பல் தாசை தாக்கிவிட்டு அவரது 3 வேனுக்கு தீ வைத்து தப்பி சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த தாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை, ஜெகவீரபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டியனை கைது செய்தனர்.