தமிழகத்தில் இனிவரும் நாட்களில் பகல்நேர வெப்பநிலை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசியதால், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 6 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது.
இந்த நிலையில், காற்று வீசும் திசையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இருப்பினும், ஓரிரு இடங்களில் அனல்காற்று வீச வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் நண்பகல் 12 மணியில் இருந்து 4 மணிவரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் இருநாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.