கொரோனா பரவலை கண்காணித்து, அதன் தாக்கத்தை பொறுத்து, கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அளவு, 85 ஆயிரமாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது, பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகள் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறிய வகையில், கடந்த 18 நாட்களில், 2 கோடியே 59 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று குறித்து தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.