திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் 3 பேரை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வாக்காளர் பட்டியலை வைத்து பணப்பட்டுவாடா செய்த அதிமுகவை சேர்ந்த 2 பெண்கள் உட்பட மூவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 92 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.