சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக நேற்று இரவு மட்டும் 2,535 பேருந்துகள் இயக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் நேற்று இரவு முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி, நேற்று இரவு 12 மணி வரை, 2,535 பேருந்துகளும், இன்று காலை 9 மணி நிலவரப்படி, சிறப்பு பேருந்துகள் உட்பட 3,065 பேருந்துகளும் இயக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும் இன்று காலை வரை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 600 பயணிகள் வழக்கமான மற்றும் சிறப்பு பேருந்துகளில் பயணித்துள்ளனர்.