தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 30 ரூபாய் வரை சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை 5 முதல் 10 சதவீதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. சுங்கக் கட்டணம் அதிகரிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
கொரோனா ஊடரங்கால் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் தற்போதைய கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர். காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அதிகரிக்கும் போது கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.