தமிழக சிறைகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, சிறைக் கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோயுடன் உள்ள 13 சிறைக்கைதிகளுக்கு சேலம் மத்திய சிறையில் தடுப்பூசி போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய சிறை, வேலூர், பாளையங்கோட்டை மற்றும் பெண்கள் தனிச்சிறை, ஆகிய சிறைகளில், 82 கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
மேலும், வெவ்வேறு சிறைகளை சேர்ந்த 647 சிறைவாசிகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆவண செய்யும்படி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனருக்கு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள்துறை தலைமை இயக்குநர் சுனில் குமார் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.