தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக சுனாமி அலையே வீசுவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேட்டுப்பாளையம், கவுண்டன் பாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தேர்தலுக்காக மட்டுமல்ல, எந்த நேரத்திலும் மக்களின் சுக, துக்கங்களில் பங்கேற்பதற்காக வரும் இயக்கம் தான் திமுக என்றார். தேர்தலை ஒட்டி வருகின்ற எல்லா கருத்து கணிப்புகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்ற தகவல் வெளியாகி வருவதாக அவர் கூறினார்.
இந்த தேர்தலில் அலையே அடிக்கவில்லை என்று சிலர் கூறுவதாக கூறிய ஸ்டாலின், தமிழகத்தில் இப்போது சுனாமியே வீசுகிறது என்றார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த பிரசாரக்கூட்டங்களில் அவர், மேட்டுப்பாளையம் வேட்பாளர் , உதகை வேட்பாளர், குன்னூர் வேட்பாளர், கூடலூர் வேட்பாளர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.
இதே போல கவுண்டம்பாளையம் வேட்பாளர், சிங்காநல்லூர் வேட்பாளர், கோவை வடக்கு வேட்பாளர், கோவை தெற்கு வேட்பாளர் ஆகியோருக்காக பிரசாரம் செய்தார்.
மயிலாப்பூர் வேட்பாளர், தியாகராயர் நகர் வேட்பாளர், ஆயிரம் விளக்கு வேட்பாளர் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.