தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 32,350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மட்டும் ஆவணங்களின்றி 42 கோடியே 78லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளது என்றார்.
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேர்தலை நடத்தும் வகையில் முகக்கவசம், பி.பி.இ.கிட், வெப்பநிலை பரிசோதனை கருவி ஆகியவை கொள்முதல் செய்ய தமிழக சுகாதாரத்துறை 52 கோடியே 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.