ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் அதிமுக அரசு, தமிழக விவசாயிகளுக்கு அரணாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து குன்னூரில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதிமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்த உடன் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்வதாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், தேர்தலில் மக்கள் திமுகவினருக்கு உரிய பதில் அளிப்பார்கள் என்றார்.
அதிமுக ஆட்சியில் மின்பற்றாக்குறை தீர்க்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு பேணப்பட்டு, தொழில்வளம் பெருகியிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.