தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் கூடுதலாக 4,495 போலீசார் ஈடுபட டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவ படையினர் தமிழகத்துக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு நாள் அன்று சட்டம்-ஒழுங்கு போலீசார் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது. இதனிடையே, சிபிசிஐடி, சிலை கடத்தல், பொருளாதார பிரிவு என பல பிரிவுகளிலிருந்து சுமார் 4,495 போலீசாரும் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.