தமிழகத்தில், விவசாய இணைப்புகளுக்கு, இன்று முதல் 24 மணி நேரமும் மும்முனை மின் வினியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழக மின் வாரியம், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு, இலவசமாக மின் வினியோகம் செய்கிறது. 'விவசாயத்திற்கு, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்' என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த புதிய நடைமுறையால், மின் தேவை வழக்கத்தை விட, கூடுதலாக, 500 மெகா வாட் வரை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.