திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு சென்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கார் விபத்துக்குள்ளானது.
தாராபுரத்தை நோக்கி கொடுவாய் அருகே சென்றுகொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசல் காரணமாக எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக எஸ்.பி.வேலுமணி வந்த காரின் மீது மோதியது.
இதனால் ஓட்டுநர் தீடிரென சடன் பிரேக் போட்டதால் பின்னால் வந்த கார் எஸ்.பி.வேலுமணி வந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது மகன் காயமின்றி தப்பினர்.
இதனையடுத்து வேறு காரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரதமர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு சென்ற நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.