இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 16 டெலி மெடிசின் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவ பரிசோதனைகள் செய்தல், நோயை கண்டறிதல், நோயாளிகளின் உடல் அளவுருக்களை கண்காணித்தல் ஆகிய பணிகளை இந்த ரோபோக்கள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் அவர்களது வீட்டில் இருந்தாலும் இந்த தொழில் நுட்பம் மூலம் சிகிச்சை பெற முடியும். மருத்துவர்கள் துல்லியமாக நோய்களை கண்டறிய டெலி மெடிசின் ரோபோக்கள் உதவுவதாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குருசங்கர் தெரிவித்துள்ளார்.