திருத்தணி தொகுதியில் தேர்தலைத் தள்ளிவைக்கும் கோரிக்கையை ஏற்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்த அருண் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில் வேட்பு மனு தாக்கல் இறுதிநாளில் நெடுநேரம் காத்திருக்கச் செய்த பின்னரே தனது மனுவைப் பெற்றதாகவும், தனது மனுவை முன்மொழிந்த 10 பேர் மிரட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது வேட்பு மனுவை நிராகரித்ததால் திருத்தணி தொகுதியில் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். வேட்பு மனுவை நிராகரித்ததை எதிர்த்துத் தேர்தல் வழக்கு மட்டுமே தொடுக்க முடியும் எனத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்த விளக்கத்தை ஏற்று மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.