செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

'பணம் கொடுத்தால் பிடித்து கொடுப்போம்! '- போர்டை பார்த்து ஓடிப் போகும் அரசியல்வாதிகள்

Mar 29, 2021 01:47:10 PM

மதுரையில் பணம் கொடுத்தால் பிடித்து கொடுப்போம் என்ற போர்டை பார்த்ததும் குடியிருப்புக்குள் செல்லாமல் அரசியல்வாதிகள் எஸ்கேப் ஆகி விடுகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மதுரை கோச்சடை பகுதியில் அமைந்துள்ள சாந்தி சதன் குடியிருப்பு வளாகத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த குடியிருப்புக்குள் உள்ளனர். இந்த குடியிருப்புக்குள் புகுந்த சில அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக தெரிகிறது. இதை தடுக்கும் வகையில், குடியிருப்பு வளாகத்தின் முகப்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்யும் அரசியல் கட்சியினர் குறித்து தேர்தல் ஆணைய அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியிருப்புவளாக செயலாளர் பாலகுருவிடம் கேட்டபோது, சுயமாக சிந்தித்து வாக்களிக்க முயற்சிக்கும் வாக்காளர்களை தங்கள் வசம் கவருவதற்காக பல அரசியல் கட்சியினர் பணத்தை வழங்கி வாக்குகளை பெற முயற்சி செய்கின்றனர். பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதனால் நல்ல ஆடசியாளர்களை உருவாக்க முடியாது. இதனால் எங்களது குடியிருப்பு வளாகத்தில் உள்ள வாக்காளர்கள் சமரசமின்றி சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அனைவரது ஒப்புதலையும் பெற்ற பின்னரே இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


Advertisement
எஸ்.பி.ஐ வங்கிக் கொள்ளை முயற்சி வழக்கில் கைதான இளைஞர்
அரசு நூலகத்தையே தங்கும் விடுதியாக பயன்படுத்தி வரும் பிற மாநில பணியாளர்கள்
பிரேக் பழுதானதால் ஓட்டுநரின் சமயோசிதத்தால் மரத்தில் மோதி நிறுத்தப்பட்ட சுற்றுலா வேன்
கோவை, ஆவாரம்பாளையத்தில் ம.தி.மு.க. அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவம்
கடலூரில் கன மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து மயானம் அமைத்துத் தரக் கோரி மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
வாக்கி டாக்கியுடன் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலி சிபிசிஐடி ஆபீசர் வசூல் வேட்டை...
கணவரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலன் இன்றி பலி
நிலத் தகராறில் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகப் போலீசாரைக் கண்டித்து புகார்
தனியார் தொழிற்சாலையில் இரும்பு கொதிகலன் வெடித்து விபத்து உத்தரப்பிரதேசத்தைச் தொழிலாளிக்கு பலத்த தீக்காயம்

Advertisement
Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?


Advertisement