முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து சேலத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே திரண்ட அதிமுகவினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், எச்சரித்ததையடுத்து சாலைமறியலை கைவிட்டு, போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் ஓரமாக நின்று ஆ.ராசாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் மதுராந்தகம் பேருந்து நிலையம் முன்பு திரண்ட அதிமுகவினர்,ஆர்.ராசாவை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலும் ஆர்.ராசா உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.