ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி, கன்னியாகுமரி, கோவை ஆகிய ஊர்களுக்கு விரைவு ரயில்களை இயக்க உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா சூழலுக்கு முன் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி, திருப்பதி, கோவை ஆகிய ஊர்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா சூழலில் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் ஏப்ரல் இறுதிவாரம் முதல் ராமேஸ்வரம் - திருப்பதி, ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே வாரம் மும்முறை விரைவு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல் கோவை - ராமேஸ்வரம் இடையே வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் கோவையில் இருந்து ஏப்ரல் 27 முதல் செவ்வாய்தோறும், ராமேஸ்வரத்தில் இருந்து ஏப்ரல் 28 முதல் புதன்தோறும் புறப்படும்.