கரூர் மாவட்டத்தில் பணப்பட்டுவாடா, முறைகேடுகள் தொடர்பாக அதிகளவு புகார்கள் வருவதால், அங்கு கூடுதல் செலவின பார்வையாளராக தீபக்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முறைகேடுகள் அதிகளவில் நடக்கும் தொகுதிகளாக அடையாளம் கண்டுள்ள 105 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.
இதுவரை 278 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்ய பிரதா சாஹு கூறினார்.