திருப்பூரில், 4 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வருங்கால வைப்பு நிதி நிறுவன அமலாக்கப்பிரிவு பெண் அதிகாரியை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் வருங்கால வைப்பு நிதி சட்ட விதிமீறல் தொடர்பாக பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக, அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் பெண் அதிகாரி லோகநாயகி 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், லஞ்சப்பணம் 4 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, பெண் அதிகாரி லோகநாயகியையும் கைது செய்தனர்.
பின்னர், லோகநாயகிக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 6 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் லஞ்சம் கொடுத்த ரமேஷ், சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.