தமிழகம் முழுவதும் டி.எஸ்.பி.க்கள் மற்றும் உதவி ஆணையர்கள் அந்தஸ்தில் பணிபுரிந்த 55 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் விதிகளின் படி காவல் துறையில் தொடர்ந்து ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகள், காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன் படி தமிழகம் முழுவதும் துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள 55 அதிகாரிகளை வெவ்வேறு பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் சென்னை உட்பட மாநகர காவல் துறையில் உதவி ஆணையர்களாக பணிபுரிந்த 30 அதிகாரிகளும், 25 டி.எஸ்.பி.க்களும் உள்ளனர்.