தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர், இவர்களில் 3 ஆயிரத்து 585 பேர் ஆண்கள் என்றும், 411 பேர் பெண்கள் என்றும் 2 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்றும் கூறினார். தமிழகத்தில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்ற சத்யபிரதா சாகு, இவற்றில் 10 ஆயிரத்து 528 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கூறினார்.
300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 44759 வாக்குச் சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் கூறினார்.