சென்னையில் அஞ்சல் வாக்குகளைப் பெறும் பணி நாளை முதல் தொடங்க உள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டோர் அஞ்சல் வாக்களிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மாவட்டத் தேர்தல் அதிகாரி பிரகாஷ், சென்னையில் 7300 பேர் அஞ்சல் வாக்குக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தார். அவர்களிடம் வாக்குகளைப் பெற அலுவலர்கள் கொண்ட 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவினர் நாளை முதல் வீடுவீடாகச் சென்று வாக்குகளைப் பெறுவர் என்றும் தெரிவித்தார்.