தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், , 2வது அலை என கூற முடியாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். தொடர்பில் இல்லாத மூன்று நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
உருமாறிய கொரோனா உள்ளதா என கண்டறிய மாதிரிகள் புனேவுக்கும் ஹைதராபாதுக்கு அனுப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படாமல் இருப்பது மக்கள் கையில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.