தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 235 கம்பேனி துணை இராணுவ படையினர் வரும் 28 ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சி விஜில் செயலி மூலம் பெறப்பட்ட 2313 புகார்களில் 1607 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 487 புகார்களும், கோவையில் 365 புகார்களும் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8561 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முசிறி எம்எல்ஏ செல்வராஜ் காரில் 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வருகிறது என்றும் சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டார்.