செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நெருங்கும் தேர்தல்… வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

Mar 24, 2021 10:26:24 PM

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

திருப்போரூர் பாமக வேட்பாளரை ஆதரித்து டாக்டர் இராமதாஸ் பரப்புரை

திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட டாக்டர் ராமதாஸ், உழவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித் தொகை, கல்வி மருத்துவம் இலவசமாக வழங்க நடவடிக்கை, மாமல்லபுரம் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் தூண்டில் வளைவு, பக்கிங்காம் கால்வாய் சுற்றுப்பயணம் உள்ளிட்ட பாமகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி, வாக்கு சேகரித்தார். 

கடலூர் திமுக வேட்பாளர் ஐயப்பனை ஆதரித்து கனிமொழி பரப்புரை

கடலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கோ.ஐயப்பனை ஆதரித்து, திமுக மகளிரணிச் செயலாளரும், அக்கட்சியின் எம்.பி.யுமான மு.க.கனிமொழி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பாதிரிபுலியூர் தேரடி வீதியில் பரப்புரையில் ஈடுபட்ட மு.க.கனிமொழி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சி அமைந்ததும், மகளிர் சுய உதவிக்குழு போன்று இளைஞர்கள் சுயஉதவிக்குழு செயல்படுத்தப்படும் என்று கூறிய கனிமொழி, கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். 

வெற்றி மீது வெற்றி வந்து.. பாடலை பாடி வீதி வீதியாக சைக்கிள் ரிக்ஷா வில் சென்று அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு 

ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர் பாடல் பாடியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் ஜெயக்குமார்,  தொகுதிக்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுக, பாஜக கட்சி தொண்டர்களுடன் சைக்கிள் ரிக் ஷா வில் அமர்ந்து வீதி வீதியாக சென்ற அமைச்சர் ஜெயக்குமார் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்  என்ற எம்.ஜி.ஆர்  பாடலை முழுவதுமாக பாடி மக்களை கவர்ந்து வாக்கு சேகரித்தார்.

மயங்கி விழுந்த தொண்டருக்கு உதவிய அமைச்சர் வேலுமணி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொண்டாமுத்தூர்  அன்பு நகர் பகுதியில் ஆதரவாளர்களுடன் சென்ற அமைச்சர் வேலுமணி இரட்டை இலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அங்கு அதிமுக தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்ததால் அந்த நபரை ஆசுவாசப்படுத்திய அமைச்சர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உதவினார்.

மயிலம் சட்டமன்ற தொகுதியில் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று திமுக வேட்பாளர் மாசிலாமணி வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக களம் காணும் திமுக வேட்பாளர் டாக்டர். ஆர். மாசிலாமணி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எடப்பாளையம், நல்லாமூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வீடு வீடாக சென்ற அவர், மக்களை சந்தித்து வாக்குகளை திரட்டினார். ரேஷன் பொருட்கள் எடைக்குறைவு, விவசாயிகளுக்கு இடுபொருட்கள் தட்டுபாடு, நெல் கொள்முதல் விலை குறைவு உள்ளிட்ட அவலங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாழைப்பழக் கடையில் அமர்ந்து பழம் விற்றும் பூவியாபாரம் செய்தும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் பாமக வேட்பாளர் கசாலி பிரச்சாரம்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கசாலி பூக்கடையில் முழம் போட்டு வியாபாரம் செய்தபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் அவர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். இதனையடுத்து லாயிட்ஸ் காலனியிலுள்ள ஒரு பூக்கடையில் அமர்ந்து கனகாம்பரம், முல்லைப் பூக்களை முழம் போட்டு விற்பனை செய்தவாறு வாக்கு சேகரித்தார். மேலும் வாழைப்பழக் கடையில் அமர்ந்து பழங்களை விற்றும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில், போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆண்டிப்பட்டி  ஒன்றியத்துக்குட்பட்ட தங்கம்மாள்புரம், வருஷநாடு, உப்புத்துறை ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அதிமுக செய்துள்ள நலத்திட்டங்களை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். 

ஆயிரம் விளக்கில் அமமுக சார்பில் போட்டியிடும் வைத்தியநாதன் தீவிர பிரச்சாரம்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வைத்தியநாதன் கோபாலபுரத்தில் உள்ள கணபதி காலனி முழுவதும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். சாலையோர வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்களிடம், துண்டு பிரசுரங்கள் மற்றும் குக்கர் சின்னம் பொறிக்கப்பட்ட கை விசிறி உள்ளிட்டவற்றை வழங்கி குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். 

திருத்தணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு 

திருத்தணி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கோ.அரி அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்மையார் குப்பம், ஏகனாபுரம், ராகவ நாயுடு குப்பம், பாலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அவருடன் திரளான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

உசிலம்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் மகேந்திரன் கிராம் கிராமமாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி, கள்ளபட்டி, மானுத்து, அல்லிகுண்டம், ராஜக்காபட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்ற வேட்பாளர், கிராம வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா வீடு வீடாக சென்று திட்ட அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா ரயில்வே விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாம்பரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு  வீடு வீடாக சென்ற அவர், மக்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுவதாக கூறி துண்டு பிரசுரங்களை  வழங்கி உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.  

வியர்வையை துடைப்பது போல் திருநீற்றை அழித்த மா.சுப்ரமணியன் ?

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மா.சுப்ரமணியன், ஜோன்ஸ் சாலையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடந்த பூஜையில் கலந்துகொண்ட அவருக்கு கோயில் பூசாரி திருநீறு பூசி ஆசிர்வாதம் வழங்கினார். கோவிலிருந்து வெளியே வந்த மா.சுப்ரமணியன், தனது உதவியாளரின் துண்டை வாங்கி வியர்வையை துடைப்பதுபோல் நெற்றியிலிருந்த திருநீற்றையும் அழித்துவிட்டு பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் கரிகாலன் தீவிர வாக்கு சேகரிப்பு

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கரிகாலன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாம்பரம் ரங்கநாதபுரத்திலிருந்து தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் சென்ற அமமுக வேட்பாளர் கரிகாலன் குக்கர் சின்னத்திற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

கிருஷ்ணகிரியில் வீடுவீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் செங்குட்டுவன்

கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செங்குட்டுவன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நசுரத்சையத்தெரு, பில்லத்நகர், கோட்டைமசூதி,மகாராஜகடை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்த அவருடன், திரளான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

சென்னை எழும்பூர் தொகுதியில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் பரந்தாமன்

சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பரந்தாமன் புரசைவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரம்பூர் பேரக்ஸ் சாலை , வைகக்காரன் தெரு , கரியப்ப தெரு , மூகத்தாள் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்த அவர், மறைந்த திமுக மூத்த நிர்வாகி நாஞ்சில் மனோகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு திரட்டினார்.

செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் கஜேந்திரன் தொண்டர்களுடன் பேரணியாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். செங்கல்பட்டு ராஜாஜி வீதி, பேருந்து நிலையம், அண்ணா சாலை ,காந்தி சாலை, சுண்ணாம்பு தெரு , மணியக்காரர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக, பாஜக கட்சி தொண்டர்களுடன் திரண்டு சென்ற அவர் வியாபாரிகளிடம் இரட்டை இலைச் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் செங்கல்பட்டு மாவட்டம் வளர்ச்சி அடைய அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

உசிலம்பட்டி தொகுதியில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் அய்யப்பன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அய்யப்பன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட வடுகப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இவருடன் திரளான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஓசூர் திமுக வேட்பாளர் ஒய் பிரகாஷ் தீவிர வாக்குசேகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஒய் பிரகாஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி சாலை, பத்தலபள்ளி, காய்கறி மார்க்கெட் மற்றும் ஓசூர் மாநகராட்சி உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வியாபாரிகள்  மற்றும் பொதுமக்களை சந்தித்த அவர், உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். 

உத்திரமேரூர் தொகுதியில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் க.சுந்தர்

உத்திரமேரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் க.சுந்தர் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெங்கச்சேரி, ஆதவப்பாக்கம், புத்தளி, புலிவாய், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக வாக்கு சேகரித்த அவர், திமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அசோக் நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் தொண்டர்களுடன் நடந்து சென்று மக்களை சந்தித்த அவர் அதிமுக வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து, அசோக் நகர் அவன்யூ சாலை பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்று இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

மதுரவாயல்  சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பா.பெஞ்சமின் மேளதாளங்கள் முழங்க மோட்டு, பட்லு கதாபாத்திரங்களுடன் வாக்கு சேகரிப்பு

சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பா.பெஞ்சமின் அயப்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேளதாளங்கள் முழங்க கார்ட்டூன் கதாபாத்திரங்களான மோட்டு, பட்லு வேடமணிந்தவர்களுடன் சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் பெஞ்சமினுக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி கும்ப மரியாதை செலுத்தினர்.

பட்டுநூல்களை பதம் பிரித்து அமைச்சர் சேவூர், இராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெசவாளர்கள் பகுதியில், அதிமுக வேட்பாளர் சேவூர் இராமச்சந்திரன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, நெசவாளர்களுடன் இணைந்து பட்டுநூல்களை பதம் பிரித்த அவர், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

பொள்ளாச்சியில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயராமனின் பிரச்சாரத்தின் போது பெண்களும் சிறுவர்களும் நடனமாடி வாக்கு சேகரித்தனர். பத்ரகாளியம்மன் கோவில் வீதி, காமாட்சி அம்மன் நகர், ஜோதிநகர், அமைதி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் வாக்கு சேகரித்தார். திரளான கூட்டணிக் கட்சியினருடன் சென்ற அவர், அதிமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு  தீவிர தேர்தல் பிரச்சாரம்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் அக்கட்சியின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் திமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அவர், இளங்காட்டு மாரியம்மன் கோயில் தெரு, புதுத்தெரு, கே.எம்.எஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்களிடம் பேசிய கே.என்.நேரு, திமுக ஆட்சிக்கு வந்தால் திருச்சியில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளும் ஒன்றாக இணைக்கப்படும் என உறுதியளித்தார்.

சென்னை எழும்பூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் பிரச்சாரம்

சென்னை எழும்பூரில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜான் பாண்டியன் வாக்கு சேகரித்தார். புரசைவாக்கம் பகுதியில் சுந்தரம் பிள்ளை தெரு, தாணா தெரு, சண்முகராயன் தெரு உள்ளிட்ட இடங்களில் தொண்டர்களுடன் சென்று அவர் ஆதரவு திரட்டினார்.

ஆயிரம் விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு அவர் கணவர் சுந்தரும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரிப்பு

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு சூளைமேட்டில் பரப்புரை செய்து வாக்குச் சேகரித்தார். சூளைமேடு நமச்சிவாய புரத்தில் வீதி வீதியாகச் சென்று பரப்புரை செய்த குஷ்பு தாமரைச் சின்னத்தில் வாக்களித்துத் தன்னை வெற்றிபெறச் செய்யும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். குஷ்பு கணவர் சுந்தர் சியும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கித் தாமரைச் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை எடுத்துக் கூறி திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியில் அன்பில் மகேஷ், பேருந்தில் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக களமிறங்கும் அன்பில் மகேஷ், பொய்யாமொழியில் சாரட் வண்டியில் வலம் வந்து, புறாவைப் பறக்க விட்டார். தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவருக்கு, அப்பகுதி மாடுபிடி வீரர்கள் காளைகளுடன் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த 50 வருசத்தில் போகாத ஏழ்மை, இப்போது இவர்கள் கொடுக்கிம் இலவசத்தால் ஏழ்மை ஒழிந்து விடுமா!! - கமல்ஹாசன் கேள்வி

கடந்த 50 வருடங்களில் போகாத ஏழ்மை, இப்போது அரசியல் கட்சிகள் கொடுப்பதாக அறிவித்துள்ள இலவசத்தால் ஒழிந்து விடுமா என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அவர், அங்குள்ள ராமநாதபுரம் திருவள்ளுவர் நகரில் பிரச்சாரம் செய்தார். 234 தொகுதிகளிலும் சுற்றி வருவதால், கோவை தெற்கு தொகுதிக்கு தினமும் வர முடியவில்லை என்றாலும், தாம் தொகுதி பிரச்சனைகளை கவனித்து வருவதாக கமல்ஹாசன் கூறினார்.

தமது பிரச்சாரத்தின் போது புதுமண தம்பதிக்கு பூங்கொத்து கொடுத்து கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்கள் குறித்து கூறி வேட்பாளர் பி.மணி தேர்தல் பிரச்சாரம்

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பி.மணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை தெற்கு மாரட் வீதி, நகைக்கடை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்த அவர், மாற்றம் ஏற்பட நேர்மையானவர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பு 

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டில் திமுகவுடான கூட்டணியில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி, சாங்கை பகுதியிலுள்ள கடைகளுக்கு சென்று ஆதரவு திரட்டினார். கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய விஜயதரணி, கடந்து பத்து ஆண்டுகளாக தொகுதிக்கு ஆற்றிய பணிகளை கூறி கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.  

ஆயிரம்விளக்குத் தொகுதி திமுக வேட்பாளர் எழிலன் வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பு 

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி திமுக வேட்பாளர்  எழிலன் தேனாம்பேட்டையில் வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார். தேனாம்பேட்டை திருவிக நகரில் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்துத் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஒரு வீட்டில் மூதாட்டியின் நலம் விசாரித்த அவர், மூதாட்டியின் காலில் உள்ள புண்ணைக் குணப்படுத்த மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்தார். வாக்குச் சேகரித்தபோது அமுதன், இனியன் என இரண்டு குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினார். ஒரு வீட்டில் மீன்வறுவலைக் கேட்டுப் பெற்றுச் சுவைத்து உண்டார்.

கும்பகோணத்தில்  திருமணம் மண்டபத்திற்குள் சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அன்பழகன்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் திருமணம் மண்டபத்திற்குள் சென்று வாக்கு சேகரித்தார். மண்டபத்தில் இருந்த
மணமக்கள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய அவர் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அதைத்தொடர்ந்து அம்மாச்சத்திரம், கொரநாட்டு கருப்பூர், கள்ளப்புளியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்த அவர் திமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தார்.

பெரம்பூர் அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் வாக்கு சேகரிப்பு

சென்னை பெரம்பூரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கொடுங்கையூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். கொடுங்கையூர் எம்ஆர் நகரில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தியபின் அவர் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஆதரவு திரட்டினார். தினமும் அந்தந்த பகுதியில் உள்ள கோவிலில் வழிபாடு நடத்திய பிறகே தனபாலன் தமது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

திண்டுக்கல் தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர்

திண்டுக்கல் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் களமிறங்கும் ராமுதேவர், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். நாகல்நகர், சந்தைப்பேட்டை ரோடு, அப்பியா சந்து, ஆசாரி சந்து உள்ளிட்ட பகுதிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற அவர், துண்டு பிரசுரங்களை வழங்கி குக்கர் சின்னத்திற்கு வாக்கு திரட்டினார்.

திரு வி.க நகர் தொகுதி திமுக வேட்பாளர் தாயகம் கவி வணிகர்கள், பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள்

சென்னை திரு வி.க நகர் தனி தொகுதி திமுக வேட்பாளர் தாயகம் கவி பட்டாளம் புதிய ஃபாரன்ஸ் சாலையில் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதியில் இருந்த வணிகர்கள் , பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். மேளதாளம் முழங்க வாக்கு சேகரித்த தாயகம் கவியுடன் பொம்மை வேடம் அணிந்த நபர் கட்சிக் கொடியுடன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.

ஆர்.கே நகர் தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர்

ஆர்.கே நகர் தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் வீதி வீதியாக நடந்து சென்று  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜீவா நகர் பகுதியில்  மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பின் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், மேளதாளங்கள் முழங்க புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு, ஜீவா நகர், சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம்  உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் பெண் ஒருவர்  செல்பி எடுத்துக் கொண்டார்.

சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தீவிர பிரச்சாரம்

சென்னை சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார். ஆரோக்கியமாதா நகரில் பிரச்சாரம் செய்த அவர், சென்னை மாநகர மேயராக இருந்தபோது , சைதாப்பேட்டை தொகுதிக்கு தாம் கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது அப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களுடன் பேசி, அவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை சைதை துரைசாமி கேட்டறிந்தார்.

திருப்பூர் வடக்கு அதிமுக வேட்பாளர் விஜயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல் உள்ளிட்ட பகுதிகளில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது மூதாட்டி ஒருவர் முதியோர் உதவித்தொகை வழங்கும்படி கேட்ட நிலையில், மூதாட்டியை அரவணைத்து தமிழக முதல்வர் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார் என்று ஆறுதல் கூறினார். 

கிருஷ்ணகிரியில் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி திமுகவினர் வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரியில் திமுகவினர் வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் வேட்பாளர் செங்குட்டுவன் போட்டியிடுகிறார். இந்நிலையில், திமுகவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் இளைஞரணியினர் மற்றும் ஐடி பிரிவினர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று வீடுகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை துறைமுகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அஹமது ஃபாசில் தீவிர பிரச்சாரம் 

சென்னை துறைமுகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அஹமது ஃபாசில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முத்தையால்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் நடந்து சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்த அவர், துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பவானி தொகுதியில்  அதிமுக வேட்பாளர் கே.சி.கருப்பணன் தீவிர வாக்கு சேகரிப்பு 

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.சி.கருப்பணன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காடப்பநல்லூர், குட்டிபாளையம், குட்டை முனியப்பன் கோவில், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களை எடுத்துக் கூறி அவர் வாக்கு சேகரித்தார்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கு.பிச்சாண்டி அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கருக்கிலாம்பாடி, மானாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களை எடுத்துக் கூறி பிச்சாண்டி வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி அமமுக வேட்பாளர் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி அமமுக வேட்பாளர் ராஜேந்திரன், தண்டோரா இசைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனி, அஜந்தா சந்திப்பு, கௌடியா மடம் சாலை உள்ளிட்ட இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த அவர், பின்னர் தண்டோரா மேளத்தை கழுத்தில் மாட்டி இசைத்துக் கொண்டே வீதிவீதியாக சென்று அமமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார்.

நெல்லை திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

நெல்லை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். கடந்த தேர்தலில் ஏ.எல்.எஸ் லட்சுமணனை வெறும் 600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திருக்கிறீர்கள் என்ற உதயநிதி ஸ்டாலின், இது நியாயமா என கூட்டத்தை நோக்கி கேள்வி எழுப்பினார். இந்த தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.எல்.எஸ். லட்சுமணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல் வகாப்- ஐ ஆதரித்து மார்க்கெட் திடலில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிரவன் மக்களிடையே வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சமயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர், இந்திரா காலணி, அம்பேத்கர் நகர் பகுதிகளுக்கு ஆதரவாளர்களுடன் சென்ற அவர் மக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது இளைஞர்கள் சிலர்
ஜல்லிக்கட்டு காளை மற்றும் வெள்ளை புறாவுடன் வந்து அவரை சந்தித்தனர்.

பல்லாவரம் தொகுதி வேட்பாளர் மினி ஸ்ரீயை ஆதரித்து சீமான் பிரச்சாரம்

பல்லாவரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மினி ஸ்ரீ கனகராஜ்க்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செங்கல்பட்டில் வாக்கு சேகரித்தார். அப்போது, கட்சி உறுப்பினரான அருண் மற்றும் நந்தினி தம்பதியரின் ஆண்குழந்தைக்கு அறிவரசன் என பெயர் சூட்டினார். பிரச்சாரத்தில் பேசிய சீமான்,
புடவை மற்றும் தங்கத்தை 10 கடைகளில் தேடி தேடி அலைந்து வாங்கும் நீங்கள் 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்யும் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் முக்கியத்துவம் கொடுங்கள் என தெரிவித்தார். தாங்கள் கேட்பது வாக்குகள் அல்ல வருங்கால தலைமுறையின் வாழ்க்கையை எனக் கூறிய சீமான், இவர்களுக்கு ஓட்டு போட்டதால்தான் நாங்கள் ரோட்டில் நின்று கத்திக் கொண்டிருக்கிறோம் என விமர்சித்தார்.

தொகுதி வளர்ச்சிக்காக தான் செய்த திட்டங்களை எடுத்துக்கூறி சீர்காழி அதிமுக வேட்பாளர் பி.வி.பாரதி தீவிர வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.வி.பாரதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சீர்காழி தொகுதியில் 2 வது முறையாக போட்டியிடும் பி.வி.பாரதி, சீர்காழி தொகுதிக்குட்பட்ட புளிச்சகாடு ,பெத்தடி தெரு ,ஈசானிய தெரு,கீழதென்பாதி,கொவிலான் தெரு, கீழ தெரு ,பிடாரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக தொகுதி வளர்ச்சிக்காக தான் செய்த திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். பிராச்சரத்தில் ஈடுபட்ட வேட்பாளருடன் இளைஞர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் தங்கமணி வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் அமைச்சர் தங்கமணி வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அலமேடு,பெரிய காடு,வசந்த நகர், ராஜாஜி நகர்,காவிரி பேருந்து நிறுத்தம், கொங்கு நகர், பிரேம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவாளர்களுடன் நடந்து சென்றும், திறந்த வெளி வாகனத்தில் சென்றும் மக்களை சந்தித்த அவர் இரட்டை இலைக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் தொகுதிக்கு செய்த நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, மீண்டும் மக்கள் சேவையாற்ற வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மாதவரத்தில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் மூர்த்தி

சென்னை மாதவரம் தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் மூர்த்தி, செங்குன்றம், பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.  இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் பின் தொடர, திறந்த வெளிவாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தமிழக மக்களின் குறைகளை தீர்க்கும் ஜெயலலிதாவின் அரசு மீண்டும் அமைய  இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.  

ராதாகிருஷ்ணன்நகர் அமமுக வேட்பாளர் காளிதாஸ் குக்கரைக் கையில் ஏந்தியபடி வாக்குச் சேகரிப்பு

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி அமமுக வேட்பாளர் காளிதாஸ் குக்கரைக் கையில் ஏந்தியபடி வீதிவீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார். புதுவண்ணார்ப்பேட்டை சந்தைப் பகுதியில் அமமுக வேட்பாளர் காளிதாஸ் குக்கரை ஏந்தியபடி வாக்குச் சேகரித்தபோது அவருடன் கூட்டணிக் கட்சியினரான தேமுதிக தொண்டர்களும் சென்றனர். பழக்கடை, பூக்கடை, மளிகைக் கடை வணிகர்களிடமும், பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடமும் குக்கர் சின்னத்தில் வாக்களிக்கும்படி அமமுக வேட்பாளர் காளிதாஸ் கேட்டுக் கொண்டார்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வீதிவீதியாக சென்றும், பீடி சுருட்டிக் கொடுத்தும் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சம்பத்குமார், பீடி சுருட்டிக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து சம்பத்குமார் என்பவர் போட்டியிடுகிறார். இந்த நிலையில், எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட நைனாம்பட்டியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பத்குமார், அங்கு பீடி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தஇஸ்லாமிய பெண்களுடன் அமர்ந்து பீடி சுருட்டிக் கொடுத்தார்.

கம்பத்தில் ம.நீ.ம சார்பில் போட்டியிடும் வேதா வெங்கடேஷ் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் கம்பத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேதா வெங்கடேஷ், வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். தேவாரம், கோம்பை, உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த அவர், டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன் நேபாளத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கபடி போட்டியில் வெற்றிப்பெற்று ஊர் திரும்பிய கம்பம் நாட்டாமை சுருளி தெரு பகுதியைச் சார்ந்த லோகநாதனை நேரில் சந்தித்த வேதா வெங்கடேஷ், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாக்கு சேகரிப்பு 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேட்டுத்தெரு வாரச்சந்தையில் வியாபாரிகளுடன் அமர்ந்து காய்கறிகளை எடை போட்டு விற்பனை செய்து கொடுத்து ஆதரவு திரட்டினர். தொடர்ந்து வாரச் சந்தையில் உள்ள அனைத்து கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுகவின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தனர்.

காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் எழிலரசன் தீவிர தேர்தல் பிரச்சாரம்

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் கூட்டணி கட்சியினர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

விருதுநகரில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜி.பாண்டுரங்கன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு

விருதுநகரில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜி.பாண்டுரங்கன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக கூட்டணியில் அத்தொகுதியில் போட்டியிடும் அவர், புதூர் பகுதியில் வீடுவீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தந்தையை இழந்த இளங்கலைப் பட்டதாரியான ஒரு பெண், தனக்கு வேலை வழங்கக் கோரியதையடுத்து தன் சொந்த நிறுவனத்திலேயே பிஜேபி வேட்பாளர் பாண்டுரங்கன் அவருக்கு பணி வழங்கினார்.

ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் தீவிர பிரச்சாரம்

ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் அதிமுக அரசில் செய்யப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரிய சேமூர் பகுதிக்குட்பட்ட காரப்பாரை, மெடிக்கல் நகர்,வித்யா நகர், முருகன் நகர்,திண்டல்,சக்தி நகர்,காமராஜர் நகர், செல்வம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகவும், திறந்த வெளி வாகனத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில்  வீடுவீடாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சண்முகநாதன்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சண்முகநாதன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சங்கரன்குடியிருப்பு கிராமத்திலிருந்து துவங்கி ஆலங்கிணறு, வேலாயுதபுரம், ஞானியார் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்த அவருடன் கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவை ஆதரித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் பிரச்சாரம்

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரபாகர் ராஜாவுக்கு ஆதரவாக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரித்தார். கே.கே.நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எந்த பிரச்னையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் பிரபாகர ராஜாவை எளிதில் அணுகலாம் எனக்கூறி வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது ஒலிபெருக்கி சரியாக வேலை செய்யாததால் இடையூறு ஏற்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து சரத்குமார் பரப்புரை

அரசியலில் மாற்றம் கொண்டு வரத் தான் கூட்டணி அமைத்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னைத் துறைமுகம்  தொகுதி வேட்பாளர் கிச்சா ரமேசை ஆதரித்துத் தங்க சாலை, சவுகார்பேட்டை பகுதிகளில் சரத்குமார் பரப்புரை செய்து டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் வாக்களிக்கப் பணம் வாங்கினால், வெற்றிபெற்ற பின் பிரதிநிதிகளை அணுக முடியாது எனத் தெரிவித்தார். 

ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் முத்துச்சாமி வாக்கு சேகரிப்பு

ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முத்துச்சாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டீச்சர்ஸ் காலணி, ஒளவையார் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சியினருடன் வீடு வீடாக நடந்து சென்று வாக்குகளைச் சேகரித்தார். பின்னர் திறந்தவெளி ஜீப்பிலும், வீதி, வீதியாக சென்று, திமுக வேட்பாளர் முத்துச்சாமி ஆதரவு திரட்டினார்.

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  நெல்லை தொகுதிக்குட்பட்ட, பேட்டை, மலையாளமேடு, டவுண் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தாம் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளதால் நிறைய அனுபவங்கள் இருப்பதாக கூறி, நயினார் நாகேந்திரன் வாக்கு கோரினார். மேலும், கங்கை கொண்டானில் தொழில்நுட்பப் பூங்காவை விரிவுபடுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்தார். 

பெருந்துறையில் திமுக கூட்டணியில் கொ.ம.தே.க வேட்பாளர் கே.கே.சி.பாலு போட்டி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் கே.கே.சி.பாலு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எலிஸ்பேட்டை, பள்ளபாளையம், காஞ்சிகோயில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி உள்ளிட்ட பகுதியில் அவர் வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக நாமக்கல் எம்.பி., சின்ராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர்.

சீர்காழியில், திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் பிரச்சாரம்

சீர்காழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மு.பன்னீர்செல்வம், கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் இரு சக்கர வாகனத்தில் புடைசூழ, திறந்த வாகனத்தில் சென்றபடி திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொண்டார்.

சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் பரப்புரை

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் ஆட்டோ ஓட்டி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் வீதிகளில் உள்ள  கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தார்.

தொடர்ந்து அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை எடுத்துக்கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் , பிரச்சாரத்தின் போது சமாதான புறாக்கள் மற்றும் பலூன்களை பறக்க விட்டும், ஆட்டோ ஓட்டியும்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் தென்மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவில்பட்டி , கயத்தார் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், கோவில்பட்டியில் முதல்முறையாக முதல்வர் வேட்பாளர் போட்டியிடுவதாக குறிப்பிட்டார். டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினர் நிதி, முதல்வர் நிதி, உள்ளாட்சி என அனைத்து நிதிகள் மூலம் தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

பொள்ளாச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வரதராஜன்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வரதராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கஸஸ் கோவில் வீதி, காந்தி மண்டபம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திமுக தேர்தல் அறிக்கையின் துண்டு பிரசுரங்களை வழங்கியவாறு வாக்கு சேகரித்த அவருடன் திரளான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

வீடுவீடாக வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர் கோகுலம் எம்.தங்கராஜ்

விருதுநகர் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் கோகுலம் எம்.தங்கராஜ் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேற்கு பாண்டியன் காலனி, முனிசிபல் காலனி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் வீடுவீடாக வாக்கு சேகரித்த அவர், அமமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களை மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

முதுகுளத்தூரில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜகண்ணப்பன் தீவிர பிரச்சாரம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜகண்ணப்பன், சாயல்குடி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

திட்டங்குளம், காணிக்கூர், புள்ளந்தை, குருவாடி, எஸ் கீரந்தை உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ஆடு வளர்ப்போர் நலன் பாதுகாப்புக்காக நல வாரியம் அமைக்கப்படும் என உறுதியளிஅத்தார்.

ஓட்டுக்களை பிரித்து போட்டால் ஏமாந்து போவீர்கள் - கடம்பூர் ராஜூ

ஒரு குடும்பத்தில் உள்ள 4 ஓட்டுகளை இரண்டு வேட்பாளர்களுக்கு 2 ஓட்டு வீதம் பிரித்து போட்டால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கடம்பூர் ராஜூ, வடக்கு திட்டங்குளம், பசும்பொன் நகர், முத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர், வாஷிங் மெஷின் வைப்பதற்கு எலக்ட்ரீசியனை அழைத்து முன்னேற்பாடுகளை இன்றே செய்து கொள்ளுங்கள் என்றார்.

காரைக்குடி ம.நீ.ம. வேட்பாளர் ராஜ்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொகுதிக்குட்பட்ட மீனாட்சிபுரம், ஜீவா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் கணேசராஜா பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கணேசராஜா  குன்னத்தூர், ஆரைக்குளம், தருவை  உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தாம் வெற்றி பெற்றால் நாங்குநேரியில் உள்ள தொழில்நுட்பப் பூங்காவை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் சாலை வசதிகளை மேம்படுத்தவும், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் பாடுபடப்போவதாகத் தெரிவித்தார்.

காரைக்குடி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தீவிர தேர்தல் பிரச்சாரம் 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அரியக்குடி பெருமாள் கோயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பழனிச்சாமி நகர், லட்சுமி நகர், பொன் நகர்ஆகிய பகுதிகளில் கூட்டணி கட்சியினர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார்.

சாலையோரக் கடையில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அறிவுடை நம்பி

தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அறிவுடை நம்பி சாலையோரக் கடையில் தேநீர் அருந்தியவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், E.B.காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கிருந்த கடைகளில் வாக்கு சேகரித்து வந்த அறிவுடை நம்பி, தன் கட்சித் தொண்டர்களுடன் ஒரு கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.

திருச்செங்கோடு தொகுதி கொ.ம.தே.க வேட்பாளர் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்செங்கோடு சட்டையம்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், திமுக கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். பெண்கள் மத்தியில், கலந்துரையாடல் நிகழ்த்தி ஈஸ்வரன் வாக்கு சேகரித்தார். 

வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்த திமுக வேட்பாளர் நல்லதம்பி

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் நல்லதம்பி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பத்தூரின் தற்போதைய எம்.எல்.ஏ.வான நல்லதம்பி, தொகுதிக்குட்பட்ட பேராம்பட்டு, சிம்மனபுதூர், குரும்பேரி, விஷமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது பெண்களிடம் பேசிய அவர் திமுக ஆட்சியில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தி தரப்படும் என உறுதியளித்தார்.

அமமுக நிர்வாகிகள் 50 பேர் அதிமுகவில் இணைந்தனர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் சோமசுந்தரம் பெருங்கோழி, சிறுங்கோழி, கட்டியாம்பந்தல் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக காஞ்சி மாவட்ட அமமுக பொருளாளர் சேகர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள், சோமசுந்தரம் முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர்.

மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெரும்பேர் கண்டிகையில் உள்ள எல்லை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கிய அவர், கடமை புத்தூர், தொழுப்பேடு ஆத்தூர், வெளியம்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களில் அதிமுக கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக நடந்து சென்றும், பின்னர் திறந்தவெளி ஜீப்பில் வீதி வீதியாக சென்றும் வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்துக்கு இடையே ‘கொத்து பரோட்டா’ போட்டுக்கொடுத்த அதிமுக வேட்பாளர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக களம் காணும் சதன் பிரபாகர், கொத்து பரோட்டா போட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

பரமக்குடி நகர பகுதிகளில் மூன்றாவது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், நெசவாளர் குடியிருப்புகள் மிகுந்த பகுதிக்கு சென்று, கைத்தறியில் நெசவு செய்து வாக்கு சேகரித்தார். முன்னதாக இறைச்சி கடைகளில் வியாபாரிகள் போன்று அமர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். 

திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தங்ககதிரவன்

நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தங்ககதிரவன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அபிராமி திருவாசல், செம்மரக்கடை தெரு, கமாலியா பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த அவருடன், கட்சித் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொண்டாமுத்தூரில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக களமிறங்கும் அமைச்சர் வேலுமணி, சுண்ணாம்பு காளவாய், பெரியசாமி வீதி, பாரதி நகர், பிருந்தாவன் சர்க்கிள், குறிஞ்சி நகர், லவ்லி கார்டன், திருமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். மக்களிடையே பேசிய அவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுகொண்டார்.

அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை கூறி அமைச்சர் காமராஜ் பரப்புரை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் காமராஜ், குடவாசல் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட காங்கேயநகரம், மணப்பறைவை, ஓகை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அம்மா வாஷிங்மெசின், முதியோர் ஓய்வூதியம் 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை எடுத்துக்கூறி, அமைச்சர் காமராஜ் பரப்புரை மேற்கொண்டார். 

டீக்கடையில் பக்கடா சுட்டு திமுக வேட்பாளர் பிரச்சாரம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமலு-வுக்கு ஆதரவாக அணைக்கட்டு வேட்பாளரும் எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த டீ கடையில் இருவரும் மாறி மாறி பக்கோடா சுட்டனர்.

தொடர்ந்து பூக்கடை மற்றும் காய்கறி சந்தையில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

குத்துச்சண்டை போட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.பி. சங்கர், குத்துச்சண்டை கிளப்பில் வீரர் ஒருவரிடம் குத்துச்சண்டை போட்டு வாக்கு சேகரித்தார். பெரியார் நகர், ஒத்தவாடை சடயங்குப்பம், கங்கை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்றும் திறந்தவெளி ஜீப்பில் சென்றும் சங்கர் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் சென்ற வீதிகளில் சிறார்கள் சிலம்பாட்டம் ஆடினர்.

இதனையடுத்து, 8வது வார்டுக்கு உட்பட்ட ஏகவள்ளி அம்மன் கோவில் பகுதியில் உள்ள குத்துச்சண்டை விளையாட்டு கிளப்பிற்கு சென்ற அவர், ஒரு குத்துச்சண்டை வீரரிடம் குத்துச் சண்டை போட்டு வாக்கு சேகரித்தார்

மாதவராவை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு பிரச்சாரம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மாதவராவ் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரான கே.வி.தங்கபாலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் முழுமையாக வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

இராசிபுரம் தொகுதியில் அமைச்சர் டாக்டர்.சரோஜா வாக்கு சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சரோஜா, சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த அமைச்சர் சரோஜா, மரவள்ளிக்கிழக்கு, வெங்காயம் சாகுபடி பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்களிடம், வயலில் இறங்கி சென்று வாக்கு சேகரித்தார். 

வந்தவாசி திமுக வேட்பாளர் அம்பேத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு'

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாம்பட்டு, ஆராசூர், வங்காரம் ஆவணவாடி  உள்ளிட்ட கிராமங்களுக்கு கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் திறந்த வெளி வாகனத்தில் சென்ற அவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைகளை எடுத்துக்கூறி உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். 

திமுக வேட்பாளர் எஸ்.சந்திரன் வீதி வீதியாக பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ். சந்திரன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மத்தூர், கொத்தூர், புச்சி ரெட்டி பள்ளி, கிருஷ்ணசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு தனது ஆதரவாளர்களுடன் திறந்தவெளி வாகனத்தில் சென்றும், வீதி வீதியாக நடந்து சென்றும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தாராபுரத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தேர்தல் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மூலனூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நெடுவலசு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எல்.முருகன் பொதுமக்களுக்கு சால்வை அணிவித்து வாக்கு சேகரித்தார்.

வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேலழகன், திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

விநாயகர் கோவிலில் சாமிதரிசனம் செய்த அவர், விருபாட்சிபுரம், பலவன்சாத்துகுப்பம், சாய்நாதபுரம், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றிப்பெற்றால் மக்களின் பிரச்சனைகள் உடனடியாக தீர்த்துவைக்கப்படும் என உறுதியளித்தார்.

பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்படும் - திமுக வேட்பாளர்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் மதிவேந்தன், போதமலை உள்ளிட்ட பகுதிகளில், கூட்டணி கட்சியினருடன் சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும், போதமலை மலைவாழ் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார். 

அம்பத்தூர் அதிமுக வேட்பாளர் அலெக்ஸாண்டர் தேர்தல் பிரச்சாரம் 

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அலெக்ஸாண்டர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பாடி குப்பம், பாடி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செய்யூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட சித்தாமூர; ஒன்றியம் நுகும்பல் கூணம்கரணை பெரிய களக்காடு சிறுநகர; புத்திரனைகோட்டை பகுதியில் திறந்தவெளி ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, பேசிய அவர், இரட்டை இலை சின்னத்திற்கு பட்டனே தேய்ந்து போகும் அளவுக்கு அதை அழுத்தி தமக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டுகொண்டார்.

சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் பாண்டியன் பிரச்சாரம்

சிதம்பரம் தொகுதியில் அதிமுக-சார்பில் போட்டியிடும் பாண்டியன் லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த திருமண வீட்டிற்கு வெளியே விடுதலை சிறுத்தைகள் கட்சி பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து சிறுவர்கள் இரட்டை இலை என கோஷமிடத் தொடங்கினர்.

வீதிவீதியாக வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் ராஜா

திருப்பத்தூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் ராஜா அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் அவர், கொரட்டி, எலவம்பட்டி, ஆதியூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த அவருடன் திரளான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீதி வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கீழராஜவீதி, திருகோகர்ணம், திருவப்பூர் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.  அதிமுக அரசின் 10 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கூறிய அமைச்சர்  விஜயபாஸ்கர், அதிமுக அரசு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும் என  உறுதி அளித்தார். 

நாகையில் அதிமுக சார்பில் களம்காணும் தங்க கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு

நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக சார்பில் களம்காணும் தங்க கதிரவன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செம்மரகடைதெரு,கமாலியா பள்ளி தெரு, யாக்ஷன் பள்ளி தெரு, பழந்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு தொண்டர்கள் புடைசூழ திறந்தவெளி வாகனத்தில் சென்ற அவர், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் முத்து ராஜாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார். வ. உ .சி நகர், ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.

அதிமுக வேட்பாளர் கே.பழனி மக்களிடையே தேர்தல் பிரச்சாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பழனி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தொகுதிக்குட்பட்ட மண்ணூர், கிளாய், வளர்புரம், தண்டலம், செங்காடு பகுதிகளுக்கு கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் சென்ற அவர் இரட்டை இலைக்கு சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது மக்களிடம் பேசிய அவர், அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்து நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். 

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் - உதயநிதி ஸ்டாலின்

திருநெல்வேலி மாவட்டத்தில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்டார்.

முற்பகலில் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட உதயநிதி, மாலையில், பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல் வகாபை ஆதரித்து, மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும், திருநெல்வேலி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். 

மதுரை கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மூர்த்தி பிரச்சாரம்

மதுரை கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மூர்த்தி ஆத்திகுளம், அங்கயற்கண்ணி நகர்,   ஐயப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து அங்கிருந்த மக்களுக்கு விளக்கி வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார்.

மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்த விசிக வேட்பாளர் 

செய்யூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடும் பனையூர் பாபு அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் அவர், சின்னகுப்பம் பகுதியிலுள்ள மீனவ மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கல்வியே எதிர்காலம் என்பதால் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு கிராமத்திலும் கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தார்.

திருவண்ணாமலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பஞ்சாட்சரம் மற்றும் செங்கம் சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அன்பு ஆகியோரை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

மக்கள் மத்தியில் பேசிய அவர், ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என சிலர் நினைத்துக்கொண்டிருப்பதாக கூறினார். 

அருப்புக்கோட்டையில், அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் பிரசாரம்

அருப்புக்கோட்டையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வைகைச்செல்வன் புளியம்பட்டி, திருநகரம், நாகலிங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேளம் அடித்தபடியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தாம் வெற்றி பெற்ற போது அருப்புக்கோட்டைக்கு அரசு கலைக்கல்லாரி, காவல் நிலையம், ஆர்.டி.ஓ அலுவலகம், ஐ.டி.ஐ கல்லூரி போன்றவற்றை கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

கோபிசெட்டிபாளையம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் செங்கோட்டையன் பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செங்கோட்டையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையம்,இருகாலூர், கருக்குபாளையம், வெள்ளியங்காட்டு காலனி, கொமரன் சாலை, கௌதம்பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

காட்பாடியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் தீவிர வாக்கு சேகரிப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட சேனுர், கலர் பாளையம், வஞ்சூர், உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அந்தந்தப் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்புகளில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பொதுமக்களிடம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட உள்ள திட்டங்கள் குறித்து பேசி வாக்கு சேகரித்தார்.

திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரச்சாரம்

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி ராஜேந்திரன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடம்பத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டஞ்சேரி பகுதியில் வீதி வீதியாக ஊர்வலமாக சென்றும், திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறும் வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது பேசிய வி.ஜி ராஜேந்திரன், தொகுதி மக்கள் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் செய்து கொடுத்துள்ளதாகவும், குடிநீர் வசதி, சாலை வசதி தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தேர்தல் பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் ஜூட்தேவை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். 

பிரச்சாரத்தின் போது பேசிய அவர்,   சட்டமன்ற தேர்தலுக்கு பின்னரும் அதிமுக ஆளுங்கட்சியாகவே தொடரும் என்றும் திமுக எதிர்க்கட்சியாகவே தொடரும் எனவும் கூறினார். 

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பிரச்சாரம்

கோவை தெற்கு பேரவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சித்தாபுதூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு வாக்கு சேகரித்த அவர், தான் வெற்றி பெற்றால் கோவை தெற்கு தொகுதிக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் என கூறினார். 

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன் அரசியல் ஸ்டார் - திருமாவளவன்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு சினிமா ஸ்டாராக இருக்கலாம் ஆனால் திமுக வேட்பாளர் எழிலன் அரசியல் ஸ்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார். மேலும், எழிலன் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு இருந்தாலும், நாம் உழைக்க வேண்டும் என திமுக கூட்டணி தொண்டர்களை கேட்டுகொண்டார்.

மணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதியை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதியை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்கு உட்பட்ட சமய புரம், மணச்சநல்லூர், புலிவலம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது பேசிய நடிகை விந்தியா, அதிமுகவின் தேர்தல் அறிக்கை தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக தீட்டப்பட்ட திட்டங்களை தாங்கிய அறிக்கை என்றார்.

விருகம்பாக்கத்தில் சுயேட்சை வேட்பாளர் ஸ்டார் குணசேகரன் வாக்கு சேகரிப்பு

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஸ்டார் குணசேகரன், வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தாரை தப்பட்டை முழங்க, வீதி வீதியாக துள்ளி குதித்த படியே விறுவிறு நடை போட்டு சென்று ஆதரவு திரட்டிய அவர், பின்னர் ஆட்டோ ஓட்டியும் வாக்கு சேகரித்தார்.

முதலியார்பேட்டை திமுக வேட்பாளர் சம்பத் இரவு நேரத்திலும் தீவிர பிரச்சாரம்

புதுச்சேரி முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத் இரவு நேரத்திலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட பாரதிதாசன் நகர், ஆலை ரோடு, முத்தாலம்மன் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

மதுராந்தகம் தொகுதி மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா தீவிர பரப்புரை

மதுராந்தகம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மொறப்பாக்கம், கழனிப்பாக்கம், கூடலூர், தன்றபேட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு, மதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு கோரினார். திமுக ஆட்சி அமைந்ததும், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சரப்பாக்கம் பகுதியில், அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்க மேம்பாலம் கட்டப்படும் என மல்லை சத்யா வாக்குறுதி அளித்தார்.

போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மீண்டும் போட்டி

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதியில் 3ஆவது முறையாகப் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, அவரது மகனும், தேனி அதிமுக எம்.பி.யுமான, ஓ.பி.ரவீந்திரநாத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

போடி எல்லையில் அமைந்திருக்கும் சாலைக்காளியம்மன் திருக்கோவிலில் வழிபாடு நடத்திய ரவீந்திரநாத், திருமலாபுரம், போடி பழைய பேருந்து நிலையிம், ஜே.கே.பட்டி, புதுக்காலணி, தேவர்திடல் உள்ளிட்ட பகுதிகளில், திறந்தவெளி வாகனத்தில் சென்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்கு கோரினார். 

சென்னை துறைமுகத்தில் நடிகை நமீதா வாக்கு சேகரிப்பு

சென்னை துறைமுகத்தில் பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வத்துக்கு ஆதரவாக நடிகை நமீதா திறந்த வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் நமீதா இந்தியில் பேசினார்.

வழிநெடுக ஏராளமானோர் நமீதாவுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.அடுத்த பத்து நாட்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். 

குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளர் தங்கமணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றால் 70ஆண்டுகளுக்கு பிறகு விவசாயி மீண்டும் முதல்வராக வர வாய்ப்பு உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் தங்கமணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இரு கண்களில் ஒருவர் தங்கமணி என்றார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.சி. கருப்பண்ணன் மற்றும் அந்தியூர் அதிமுக வேட்பாளர் சண்முகவேல் ஆகியோரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார்..

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்தை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

 


Advertisement
கரூர் அருகே வீட்டின் அருகே விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
கன்னியாகுமரி தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்துகளில் 11 பேர் உயிரிழப்பு
ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்
திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த பாலிஹோஸ் நிறுவனத்தில் ஐ.டி. சோதனை
பள்ளி வாசலில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவன்... காரணம் குறித்து காவல்துறை விசாரணை
பட்டுக்கோட்டை ரெஙக்நாத பெருமாள் கோயில் நிலத்தில் கொட்டகையை அகற்ற முயன்ற கோவில் அதிகாரிகள் மீது தாக்குதல்
திருப்பத்தூர் அருகே நெல் அடிக்கும் போது அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு
அலட்சியமாக பெண் சாலையை கடந்ததால் பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு..
அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் முன்பே நடந்த தகராறு..

Advertisement
Posted Nov 19, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்

Posted Nov 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!

Posted Nov 19, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூர் கோவில் யானை.. துதிக்கையை முத்தமிட்டு செல்ஃபி.. தூக்கி அடித்ததால் இருவர் பலி..! யானை ஆவேசமான பின்னணி..

Posted Nov 18, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஒருமுறை பயிர் 25 ஆண்டு பலன்... லாபம் தரும் டிராகன் ப்ரூட் செலவு குறைவு, லாபம் அதிகம்...

Posted Nov 19, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..


Advertisement