வேலூர் மாவட்டத்தில், சாராயம் குடிக்க காசு தராத மூதாட்டியை எரித்து கொன்ற நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
குடியாத்தம் அடுத்த பெருமாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரகுமணி என்ற மூதாட்டியிடம் ராமாபுரம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் சாராயம் குடிக்க காசு கேட்டு தகராறு செய்து உள்ளார். இதில் வாய்த் தகராறு கைகலப்பில் முடிய மூதாட்டியை தள்ளிவிட்டு கொலை செய்து உள்ளார்.
எங்கே சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் மூதாட்டியை தீ வைத்து எரித்து உள்ளார். மூதாட்டியிடம் திருடிய மூக்குத்தியை விற்க சென்ற குமாரை கையும் களவுமாகப் பிடித்த அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.