திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 1 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
திருச்சி அடுத்த பெட்டவாய்த்தலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். இதில் காரில் சாக்கு முட்டையில் மறைத்து பணம் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உரிய ஆவணங்கள் இல்லாததால் ஒரு கோடி ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள் பணத்தின் உரிமையாளர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.