தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் உட்பட 17 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து மட்டும் 3090 சிறப்பு பேருந்துகள் உட்பட 14,215 பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மட்டும் பேருந்துகள், பண்டிகை நாட்களான பொங்கல், தீபாவளி நாட்களை போன்று, கோயம்பேடு உட்பட 5 இடங்களில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டமன்றத் தேர்தலையொட்டி கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், பெங்களூர் ஆகிய ஊர்களிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கு 2,644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.