அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வெழுதும் மாணவர்களின் மாநிலங்களிலேயே கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க தேசிய தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில் நடைபெறவுள்ள நீட் தேர்விற்காக தமிழகத்தில் 28 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெற தொடங்கிய சில மணி நேரங்களில், அவை நிரம்பிவிட்டன.
அதனால் அந்த தேர்வு மையங்கள், ஆன்லைன் விண்ணப்ப படிவங்களில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும், கூடுதல் மையங்கள் அமைக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, தேர்வு மையங்களை அதிகரிக்க தற்போது உத்தரவிட்டால் குழப்பம் ஏற்படும் என்பதால் அடுத்த ஆண்டு முதல், தேர்வெழுதும் மாணவர்களின் மாநிலங்களிலேயே தேர்வு எழுத கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.