புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஒரு காரில் இருந்து இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகள் மற்றும் ஒரு டைரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சாங்கிராபட்டி அருகே பேராவூரணியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 50க்கும் மேற்பட்ட இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பகுதி வாரியாக அரசியல் கட்சி நிர்வாகிகள் பெயர்களுடன் கூடிய டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.