தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
25, 26 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.