தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு, அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, இணையவழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.
23 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் உயல்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் இணைவழி முறையில் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் பயிலும் இறுதி பருவ மாணவர்களுக்கு 31 ஆம் தேதிக்குள் செயல்முறை வகுப்புகள் மற்றும் தேர்வுகளை முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பருவத்திற்கான இறுதி பருவ தேர்வுகளை இணையவழியில் மட்டுமே நடத்திடவும் உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.