பெருந்துறை வாக்கு சேகரிப்பின் போது அடிக்கப்பட்ட ஜமாப் இசைக்கு தகுந்தவாறு சரக்கு தொண்டர்கள் மூவர் போட்ட சடன் பிரேக் டான்சால் பிரச்சாரம் களை கட்டியது
பிரச்சாரத்தில் மேளம் அடித்தால் ஊரில் யாருக்கு ஆட்டம் வருகிறதோ இல்லையோ சரக்கு தொண்டர்களுக்கு சர்வ சாதாரணமாக ஆட்டம் வந்து விடுகின்றது..!
பெருந்துறை அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரிக்க ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்ற நிலையில், பிரச்சாரத்தின் போது உற்சாகமாக இருக்க மது போதையில் வந்த சரக்கு தொண்டர்கள் இருவர் அங்கு இசைக்கப்பட்ட ஜமாப் இசைக்கு தகுந்தவாறு ஆட்டம் போட்டனர்..! அதில் ஒருவர் இருகைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு சடன் பிரேக் டான்ஸ் ஆடினார்..!
பொறுப்பாக மாஸ்க் அணிந்து ஆடிய அவர்களது ஆட்டம் களைகட்டிக் கொண்டிருக்க, மூன்றாவதாக மொட்டை தொண்டர் ஒருவர் களம் புக ஆட்டம் அதகளமானது..!
மூவரும் போட்ட தண்ணீர் போதைக்கு தக்கவாரு ஆடிக்கொண்டிருக்க , மறுபுரத்தில் குடிக்க தண்ணீர் கேட்டு பிரசாரத்துக்கு வந்த பெண்கள் கையேந்திக் கொண்டு இருந்தனர். ஆளுக்கொரு தண்ணீர் பாட்டிலை வண்டியில் நின்ற வள்ளல் வாரி வழங்கிக் கொண்டிருந்தார்.
பிரச்சாரத்தில் மக்களை கவர்வதற்கு தாளம் இருக்கனும், தாளம் என்றால் நடனமாட அங்கு தொண்டர் இருக்கனும் என்பது பிரச்சார வழிமுறையாகி வருகின்றது.