மக்கள் நீதி மய்யக்கட்சியின் துணைத் தலைவரும், அண்ணா நகர் தொகுதி வேட்பாளருமான பொன்ரராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை சாலிகிராமத்திலுள்ள சித்த மருத்துவர் வீரபாகுவின் உழைப்பாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்தை இணையதளம் மற்றும் டிஜிட்டல் மூலம் பொன்ராஜ் மேற்கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை, மநீம கட்சி தேர்தல் அறிக்கை வெளியீட்டின் போது, அக்கட்சி தலைவர் கமலஹாசனுடன் பொன்ராஜும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.