செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

15 வயது முதல் திமுகவிற்காக உழைத்து தற்போது முதலமைச்சர் வேட்பாளராக மக்களை சந்தித்து வருகிறேன் - மு.க.ஸ்டாலின்

Mar 20, 2021 07:04:36 PM

15 வயது முதல் திமுகவிற்காக உழைத்து, எம்எல்ஏ, மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் என படிப்படியாக உயர்ந்து, தற்போது முதலமைச்சர் வேட்பாளராக மக்கள் முன் நிற்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்தும் தக்கலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பத்து ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களுக்கு என்னவெல்லாம் செய்துள்ளது என முதலமைச்சரால் பட்டியலிட முடியுமா? என கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் மக்கள் கொடுமைகளை அனுபவித்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

அரசியலில் தாம் படிப்படியாக உயர்ந்தவன் என்று குறிப்பிட்ட திமுக தலைவர், முதலமைச்சர் வேட்பாளராக தற்போது தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருவதாகத் தெரிவித்தார்.

மீனவர்களை பாதுகாக்க தேசிய மீனவ ஆணையம் அமைக்கப்படும், படகு டீசல் மானியம் 2000 லிட்டராக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்த மு.க.ஸ்டாலின், வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தின் சுயமரியாதை காக்க நடக்கும் தேர்தல் என்பதால், திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

திருநெல்வேலி வாகையடி முக்கு பகுதியில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், அம்பாசமுத்திரம் திமுக வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான இரா.ஆவுடையப்பன், பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல் வகாப் ஆகியோருக்கு ஆதரவாக, மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்தார்.

இராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு, நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வாக்குகோரினார். திமுக ஆட்சிக்கு வந்தால், நீர் நிலைகள் - இயற்கை வளங்களை பாதுகாக்கவும்,  கண்காணிக்கவும் 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். மேலும், பொது சொத்துக்களை பாதுகாக்கும் பணிகளில் 75,000 சாலை பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினார். 


Advertisement
ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவல்... பள்ளி நிர்வாகியின் காலில் விழுந்து கெஞ்சிய சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள்
தனியார் பேருந்துகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகசுங்கக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போராட்டம்
அரசு மாணவியர் விடுதியில் அரிசி கடத்தல்.. பள்ளி மாணவிகளை வைத்தே எடுத்துச் செல்வதாக புகார்
நீலகிரியில் உறைபனி துவங்கிய நிலையில் குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு
பீகாரில் இருந்த கோவைக்கு வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்
பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க சென்ற தனிப்படை எஸ்.ஐ.-யை தாக்கிய கும்பல்
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த அண்ணன் தம்பிகள் 3 பேர் மாயம்
தூத்துக்குடியில் மழையால் 70,000 ஏக்கர் பயிர்கள் பெரும் சேதம்.. பயிருக்கு குறைந்த விலை கிடைப்பதால் விவசாயிகள் கவலை
கோவை அருகே மக்கள் வசிப்பிடப் பகுதியில் கடமான்கள் தஞ்சம்
நெல்லையில் 5 இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் முழுமையாக அகற்றம்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement