திமுக ஆட்சி காலத்தில் நிலவி வந்த மின்சார தட்டுப்பாட்டை அதிமுக அரசு ஒரே ஆண்டில் நீக்கி விட்டது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், தற்போது மின்சாரத்தை தமிழகம் தன்னுடையே தேவைக்கு எடுத்துக் கொண்டது போக வெளிமாநிலங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்றார்.