சிறுபான்மை மக்களுக்கு என்றும் திமுக தான் துணையிருக்கும் என்று அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, சூலூர், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளுக்கான திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கோவை ஈச்சனாரி அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் சிறுபான்மை மக்களுக்கு என்றும் திமுக தான் துணையிருக்கும் என்றார்.
கொரோனா பாதிப்பு நிவாரணமாக திமுக அறிவித்த 4 ஆயிரம் ரூபாய், திமுக ஆட்சி அமைந்த உடன் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி மக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
பொள்ளாச்சி ரயில் நிலையத்தை சேலம் மண்டலத்துடன் இணைக்க நடவடிக்கை உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளியே வரும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு ஆதரவாக ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பொதுமக்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் அவர் வாக்கு சேகரித்தார்.