தமிழகத்தில் பட்டியலினத்தில் உள்ள 7 சாதிப்பிரிவுகளை ஒன்றிணைத்துத் தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான சட்ட முன்வரைவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் பட்டியலினத்தில் உள்ள குடும்பர், பள்ளர், கடையர், தேவேந்திர குலத்தார், வாதிரியார், பண்ணாடி, காலாடி ஆகிய 7 சாதிப் பிரிவுகளை ஒன்றாக்கித் தேவேந்திரகுல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுத் தேவேந்திர குல வேளாளர் எனப் பெயர் சூட்டும்படி மத்திய அரசுக்குத் தமிழக அரசு பரிந்துரைத்தது. அதன்படி மக்களவையில் இன்று கொண்டு வரப்பட்ட மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.