பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படுத்தும் வகையில் தோப்பு வெங்கடாசலம் நடந்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருந்துறை அதிமுக வேட்பாளரை எதிர்த்து, சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த காரணத்தால், ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த தோப்பு வெங்கடாசலம், அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.