தமிழகம் முழுவதும் தபால் வாக்கு செலுத்த சுமார் 2 லட்சத்து 45ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்டன. அந்தவகையில் இதுவரை தபால் வாக்கு செலுத்த அனுமதி கோரி 2 லட்சத்து 44 ஆயிரத்து 922 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதில் 2,770 பேர் காவலர்களும், 33,189 பேர் தேர்தல் பணியாளர்களும் ஆவர். 49,114 மாற்றுத்திறனாளிகளும், 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஒரு லட்சத்து 59,849 பேரும் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்துள்ளனர்.
கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் தபால் மூலம் வாக்கு செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தபால் வாக்குக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.