"அமமுக குறித்து கேள்வி கேட்டால் சப்பென்று அடித்துவிடுவேன்" என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது செய்தியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்க வந்த அமைச்சரிடம் அமமுக குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். அப்போது கோபமடைந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமமுக குறித்து கேள்வி கேட்கக்கூடாது, அப்படி கேள்வி கேட்டால் சப்பென்று அடித்துவிடுவேன்” என்றார்.