ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தகுதி பெற்றுள்ளார்.
தோஹாவில் நடந்த போட்டியின், ரவுண்ட் ராபின் சுற்றில் பாகிஸ்தான் வீரர் முகமது ரமீசை எதிர்கொண்ட சரத் கமல் 4-க்கு 0 என்ற செட் கணக்கில் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு தமிழக வீரர் சத்தியன் ஞானசேகரன் முறையே பாகிஸ்தான் வீரர் முகமது ரமீசை 4-க்கு 0 என்ற செட் கணக்கிலும் மற்றொரு ஆட்டத்தில் சக தமிழக வீரர் சரத் கமலை 4-க்கு 3 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தி ஒலிம்பிக் போட்டி தகுதி பெற்றார். பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சுதிர்தா முகர்ஜி மற்றும் மணிக்கா பத்ரா ஆகியோ ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தனர்.