காவிரியில் இருந்து வெளியேறும் உபரிநீரை தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும், காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட உள்ள திட்டம் குறித்து கர்நாடக சட்டசபையில் கேள்வி எழுப்பபட்டது.
இதற்கு பதிலளித்த மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், அடுத்தக் கட்டமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்தார்.