பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சிக்கிய டிஜிபி அந்தஸ்து அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் மீது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் தனியாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பாலியல் புகாரைத்தொடர்ந்து சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம், பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி.யை ஏன் இதுவரை பணியிடை நீக்கம் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியது.
சிறப்பு டிஜிபியிடம் விசாரணை நடத்தப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.