சென்னை திருவிக நகர் சட்டமன்ற தனி தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு தமிழ் படிக்கத் தெரியாததால், அருகில் இருந்து மாவட்டச் செயலாளர் சொல்லிக் கொடுக்க, அதை அப்படியே சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
சென்னை திருவிக நகர் சட்டமன்ற தனி தொகுதியில் அமமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக சேகர் போட்டியிடுகின்றார். அவர் தனது கூட்டணி கட்சியினருடன் வேட்புமனுதாக்கல் செய்ய சென்றார். வேட்மனுவை அளித்து விட்டு உறுதிமொழிப் பத்திரம் வாசிக்கும் நேரம் வந்தது.
அப்போது தேமுதிக வேட்பாளர் சேகர் கையில் உறுதிமொழிப் பத்திரத்தை வைத்துக் கொண்டு திரு திருவென விழித்தார். அவருக்கு தமிழ் படிக்க தெரியாது என்பதை அறிந்த உடன் வந்த மாவட்டச் செயலாளர் நிதானமாக உறுதி மொழியை வாசிக்க, அதனை வேட்பாளர் சேகர் அப்படியே திருப்பிச் சொன்னார்
திக் திக் மன நிலையுடனே வேட்பாளர் சேகர், ஒரு வழியாக வேட்புமனுத் தாக்கலை செய்து முடித்தார். அவரிடம் விசாரித்த பின்னர் தான் தெரிந்தது, வேட்பாளர் சேகருக்கு, தமிழ் மட்டுமல்ல எந்த மொழியுமே படிக்க தெரியாது என்பது..!