தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக ஏப்ரல் முதல் வாரத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் நடைபெறுமென அறிவித்துள்ளனர்.