நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு, கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
நூல் விலை உயர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
185 ரூபாயாக இருந்த ஒரு கிலோ 40ம் நம்பர் வார்ப் நூல் தற்போது, ரூ.280 ஆக உயர்ந்துள்ளது. அடிக்கடி உயரும் நூல் விலைக்கு ஏற்ப ஜவுளிகளின் விலையை உயர்த்தி விற்பனை செய்ய முடியவில்லை என ஜவுளி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
செயற்கையான நூல் தட்டுப்பாட்டை உருவாக்குவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த கடை அடைப்பு போராட்டத்தால் 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. கடையடைப்பு காரணமாக ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி, ஆர். கே. வி .ரோடு, மணிக்கூண்டு போன்ற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.