சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழிகளும், மண்ணால் செய்யப்பட்ட தட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கொந்தகையில் நடந்த அகழாய்வில் 5 முதுமக்கள் தாழிகளும், மண்ணால் செய்யப்பட்ட சிவப்பு கருப்பு வண்ணத்திலான தட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தமிழ்நாடு தொல்லியல் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.