கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் தேர்தல் நடந்த போது, நாள்தோறும் 12ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், தமிழகத்தில் தற்போது அள்ளளவு எண்ணிக்கையிலான பாதிப்புகள் இல்லை எனவும் கூறினார்.
தினந்தோறும் சுகாதாரத் துறையுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாகவும், சூழலுக்கு தகுந்தாற் போல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வதான் மீது எழுந்த புகார் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.